இந்தியா முழுவதும் ஆன்மீக எழுப்புதல் ஏற்படுவதற்காக எங்களுடன் இணைந்து ஜெபியுங்கள். மக்களின் இருதயங்கள் தேவனை நோக்கித் திரும்பவும், வாழ்க்கைகள் மாற்றமடையவும், திருச்சபைகள் பலப்படுத்தப்படவும், கிறிஸ்துவின் அன்பு ஒவ்வொரு சமூகத்திற்கும், நகரத்திற்கும், கிராமத்திற்கும் சென்றடையவும் ஜெபிப்போம்.
1970-ம் ஆண்டுகளில் சகோ. ஆபிரகாம் ராஜபாண்டியன் மற்றும் பல தேவ ஊழியர்கள் முக்கியமாக டாக்டர். ஜீவானந்தம், டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன், பே. தேவதாசன் இணைந்து தேசத்தின் எழுப்புதலுக்காக நாம் என்ன செய்ய வேண்டும் என கர்த்தருடைய பாதத்தில் பல நாட்கள் காத்திருந்தார்கள்.
அவர் (இயேசுகிறிஸ்து) ஜெபம் பண்ணும்படி ஒரு மலையின் மேல் ஏறி, இராமுழுவதும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தார் (லூக். 6:12) என்ற வேதவசனத்தின் அடிப்படையில் கர்த்தர் இந்த ஊழியர்களோடு பேசினார். பின்னர் இவர்கள் கர்த்தருடைய பாதத்தில் காத்திருந்த போது தேசத்தின் எழுப்புதலுக்காக முழு இரவும் ஜெபிக்கும்படி கர்த்தர் பாரத்தைக் கொடுத்தார்.
இந்த பாரத்தின் அடிப்படையில் 1972-ம் ஆண்டு சென்னை பெரியார் திடலில் வைத்து முழு இரவு ஜெபம் ஆரம்பிக்கப்பட்டது. இரவு 9 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான விசுவாசிகள் ஜெபத்தில் கலந்து கொண்டு தேசத்தின் எழுப்புதலுக்காக ஜெபித்தார்கள்.
இடம் போதாததினால் சென்னை வி.பி. ஹாலுக்கு மாற்றப்பட்டு ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளி இரவு நடைபெற்றது. 5 ஆயிரத்துக்கும் அதிகமான விசுவாசிகள் பங்கு பெற்று தேசத்தின் எழுப்புதலுக்காக ஜெபித்தார்கள், அல்லேலூயா.
ஜெபத்தின் மூலம் தேவனைத் தேடுவதற்கும், விசுவாசிகள் ஒன்றிணைந்து விசுவாசத்தில் நிலைத்திருக்கவும், ஒவ்வொரு நகரம், கிராமம், திருச்சபை, குடும்பம் மற்றும் சமூகத்திலும் எழுப்புதலுக்காக ஜெபிக்கவும் நாங்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறோம். ஜெபம், சுவிசேஷப் பணி மற்றும் உண்மையான சேவையின் மூலம், இயேசு கிறிஸ்துவின் அன்பும் கிருபையும் வெளிப்பட்டு, வாழ்க்கைகள் மாற்றம் பெறுவதையும் சமூகங்கள் புதுப்பிக்கப்படுவதையும் காண விரும்புகிறோம்.
இந்தியா முழுவதும் ஆன்மீக எழுப்புதலுக்காக ஒன்றிணைந்து ஜெபிப்போம். இருதயங்கள் தேவனை நோக்கித் திரும்பவும், குடும்பங்கள் பலப்படவும், திருச்சபைகள் புதுப்பிக்கப்படவும், சமூகங்கள் தேவனுடைய அன்பும் கிருபையும் அளிக்கும் மாற்றும் வல்லமையை அனுபவிக்கவும் ஜெபிப்போம்.